Skip to main navigation Skip to main content

தனியுரிமைத் தகவல் சேகரித்தல் அறிவிப்பு

COVID-19 அவசரகால நிவாரணம் - அவசரகால நிவாரண உதவி - விக்டோரியா

தகவலைச்சேகரிப்பவர்யார்?

ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட Australian Red Cross Society

தனியுரிமை குறித்த கேள்விகளைக் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பலாம்:

Head of Legal
Australian Red Cross
23-47 Villiers Street
NORTH MELBOURNE VIC 3051
தொலைபேசிஎண்: 1800 RED CROSS (733 276) அல்லது மின்னஞ்சல் முகவரி: privacy@redcross.org.au

தகவல்கள் சேகரிப்பின் சான்றுகள் மற்றும் பின்னணிகள்

நாங்கள் உங்களுடைய தகவல்களைக் கீழ்க்கண்டவாறு சேகரிக்கலாம்:

  • நேரடியாக உங்களிடமிருந்து அல்லது உங்களுடைய பாதுகாவலரிடமிருந்து;
  • உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து; மற்றும்
  • உங்களுக்குச் சேவைகளை வழங்கும் பிற நிறுவனங்களிலிருந்து. COVID-19 பெருந்தொற்றின் போது Red Cross உங்களுக்கு ஆதரவளிக்க உதவும் வகையில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்கும் அரசின் துறைகள்/முகமைகள் அல்லது பிற நிறுவனங்கள் இதில் அடங்கும். ஆனால், அத்துடன் வரம்பிடப்பட்டதல்ல.

உங்களுக்குத் தொடர்ந்து சேவைகளை வழங்க அவசியப்படும் தகவல்களை மட்டுமே பிற நிறுவனங்களிலிருந்து நாங்கள் சேகரிக்கிறோம்.

நீங்கள் வழங்கும் தகவலில் உங்களுடைய தனிப்பட்ட தகவல் அடங்கும். தனியுரிமைச் சட்டம் 1988 மற்றும் ஆஸ்திரேலிய தனியுரிமைக் கோட்பாடுகள் உள்ளிட்ட உங்களுடைய தனிப்பட்ட தகவல் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இத்தனிப்பட்ட தகவல் முதன்மையாக Red Cross’ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பொருந்தக்கூடிய ஏதேனும் ஒரு சட்டம் அல்லது நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்தத் தகவல் சேகரிப்பு செய்யப்படுகிறதா?

இல்லை, எந்த ஒரு பொருந்தக் கூடிய சட்டமும் நீதிமன்ற உத்தரவும் காரணமாக இந்தத் தகவல் சேகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.

இந்தத் தகவலை Red Cross சேகரிக்க வேண்டிய தேவை என்ன?
நாங்கள் தகவலைச் சேகரிக்க வேண்டிய தேவை உள்ளது, ஏனெனில்,

  • நாங்கள் உங்களுக்குச் சமூக ஆதரவுச் சேவைகளை வழங்க முடியும்;
  • தேவைப்படின், உங்களுக்குத் தேவையான தங்குமிடம், சுகாதாரம் மற்றும் பிற சமூக ஆதரவு சேவைகளை வழங்க பிற அமைப்புகளின் மூலம் ஏற்பாடு செய்ய இயலும்.
  • ஏதேனும் அவசரகால சூழ்நிலையில் உங்களை அல்லது உங்கள் சார்பாக தொடர்பு கொள்ளுமாறு நீங்கள் அனுமதித்த நபரை எங்களால் தொடர்பு கொள்ள இயலும்; அல்லது
  • Red Cross அல்லது பிற மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுடன் உங்கள் சந்திப்புகளை உறுதிப்படுத்த அல்லது மாற்றி அமைத்துக்கொள்ள எங்களால் உதவ முடியும்.

தகவல் சேகரிக்கப்படுவதன் முதன்மையான நோக்கம்

COVID-19 பெருந்தொற்றின் போது உங்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆதரவுச் சேவைகளை உங்களுக்கு வழங்குவதே இந்தத் தகவல் சேகரிப்பின் முதன்மையான நோக்கமாகும். நாங்கள் உங்களுக்கு நேரடியாக ஆதரவுச் சேவைகளை வழங்குவோம் அல்லது உங்களுக்குச் சேவைகளை வழங்க மற்ற நிறுவனங்களுக்குப் பரிந்துரைப்போம்.

Red Cross இந்தத் தகவலைச் சேகரிக்காவிட்டால் என்ன ஆகும்?

Red Cross உங்களிடமிருந்து இந்த தகவலைச் சேகரிக்கவில்லை எனில், நீங்கள் பெறத் தகுதியான சில அல்லது அனைத்து ஆதரவுச் சேவைகளையும் எங்களால் உங்களுக்கு வழங்க முடியாமல் போகலாம்.

பெயரிலி/புனைப்பெயர்

உங்களுடைய உண்மையான பெயரைப் பதிவு செய்யாமல் எங்களால் உதவ இயலாது.

நாங்கள் பொதுவாக இந்தத் தகவலை வெளிப்படுத்தும் நிறுவனங்கள்

உங்களுக்குச் சமூக ஆதரவுச் சேவைகளை வழங்க பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இதைச் செய்ய, உங்களுக்குச் சேவைகளை வழங்கும் அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கு நிதியளிக்கும் பிற நிறுவனங்களுடன் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

கீழ்காணும் நிறுவனங்கள் இதில் அடங்கும்:

  • சுகாதாரச் சேவை வழங்குநர்கள் (எடுத்துக்காட்டாக, உங்களுடைய மருத்துவர், மருத்துவமனை, பல் மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் பிற மருத்துவப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள்)
  • மனநலப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள்
  • ஹோட்டல்கள், அவசரகாலத் தங்குமிடச் சேவைகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் உள்ளிட்ட தங்குமிடம் மற்றும் வீட்டுவசதி வழங்குநர்கள் மற்றும் உங்களுக்குத் தற்காலிக அல்லது நிரந்தர வீட்டுவசதி ஏற்பாடு செய்யத் தேவைப்படும் பிற நிறுவனம்
  • ஆங்கில மொழி வகுப்புகள் மற்றும் பிற பயிற்சிகளை வழங்கும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி வழங்குநர்கள்
  • குழந்தை பராமரிப்புச் சேவை வழங்குநர்கள்
  • வேலைவாய்ப்புச் சேவை வழங்குநர்கள்
  • சட்டம் சார்ந்த சேவை வழங்குநர்கள்
  • காமன்வெல்த் அரசுத் துறைகள்
  • கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்கும் உங்களுடைய மாநிலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள அரசுத் துறைகள்.

ஆதரவுச் சேவைகள் கோரி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதின் மூலம், அந்த அமைப்பு உங்களுக்கு சேவைகளை வழங்க அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கு நிதியளிக்கத் தேவையானத் தகவல்களை மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொள்வோம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உங்களுடைய தகவலை ஒரு நிறுவனத்திற்கு வெளிப்படுத்துமாறு நாங்கள் கட்டாயப்படுத்தப்படலாம். அவ்வாறு கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில், தகவல்களை வெளியிடுவதற்கு முன் உங்களுக்குத் தெரிவிக்க முயற்சி செய்கிறோம்.

அணுகல் மற்றும் திருத்தம்

உங்களுடைய தகவலை அணுகுதல் மற்றும் திருத்தங்களைக் கோருதல் பற்றிய விவரங்கள் redcross.org.au/privacy என்ற இணைப்பில் உள்ள Red Cross தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தனியுரிமைக் கொள்கையின் காகித நகலைக் கீழ்காணும் முகவரியில் கோரிப் பெற்றுக் கொள்ளலாம்:

Head of Legal
Australian Red Cross Society
23–47 வில்லியர்ஸ் செயின்ட் நார்த் மெல்போர்ன் விஐசி 3051 மற்றும்

தொலைபேசி: 1800 Red Cross (733 276)
ஃபேக்ஸ்: 61 3 9345 1800 மற்றும்
மின்னஞ்சல்: privacy@redcross.org.au
புகார்கள்

புகாரளித்தல் பற்றிய தகவலும் Red Cross தனியுரிமைக் கொள்கையில் உள்ளது. தனியுரிமை ஆணையரிடம் oaic.gov.au என்ற இணையதளத்தில் நேரடியாகப் புகார் செய்யலாம்.

கீழ்காண்பவற்றைத் தவிர, அனைத்துச் சூழ்நிலைகளிலும் மற்றொரு நிறுவனத்துடன் உங்களுடைய தகவலைப் பகிர உங்களின் ஒப்புதலை Red Cross எதிர்நோக்குகிறது மற்றும் மதிக்கிறது:

  • சம்மதத்தைப் பொருட்படுத்தாமல் உங்கள் தகவலை வெளியிட நாங்கள் சட்டப்படியான கடமைக்கு உள்ளாகுதல்; அல்லது
  • உங்களுடைய ஒப்புதலைப் பெறுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாமை, நீங்கள் சம்மதம் தர மறுத்துவிடீர்கள் ஆனால் ஒரு நபர் அல்லது ஒரு குழுவினரின் உயிர், உடல்நலம் அல்லது பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தடுக்க அல்லது குறைக்க இந்த வெளிப்படுத்துதல் நியாயப்படி அவசியமாதல்

எனது தகவல்கள் நாட்டிற்கு வெளியிலும் சேமிக்கப்படுமா?

உங்களுடைய தகவல் ஆஸ்திரேலிய Red Cross – ஆல் ஆஸ்திரேலியாவில் சேமிக்கப்படுகிறது.