13 ஜூலை 2020
COVID-19- பெருந்தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டுள்ளோம். மேலும், உங்களுடைய மிகவும் அவசரமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு நிதி நிவாரணம் தேவைப்படலாம்.
நீங்கள் எங்களைத் தொடர்புகொள்வதற்கு முன்பு படித்து அறிந்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அவசரகால நிவாரணம் என்றால் என்ன?
இந்தச் சேவை யாருக்கானது?
நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?
எனக்கு இப்போது உதவி தேவை
விக்டோரியாவில் உள்ளவர்களுக்கு கூடுதல் உதவி
அவசரகால நிவாரணம் என்றால் என்ன?
உணவு, மருந்து அல்லது இருப்பிடம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவுவதே அவசரகால நிவாரணம் என்பதாகும்.
குறிப்பாக காமன்வெல்த் வருமான உதவி (வேலை தேடுபவர் மற்றும் வேலைக்கு ஆள்வைத்திருப்பவர் உட்பட) அல்லது விக்டோரியன் அரசின் சர்வதேச மாணவர் அவசரகால நிதி உதவிக்கான அணுகல் இல்லாதவர்களுக்கு ஆதரவளிக்க ஆஸ்திரேலிய Red Cross விக்டோரியன் அரசின் நிதியுதவியைப் பெற்றுள்ளது.
இந்த ஆதரவானது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை இலக்காகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட தேவையைப் பொறுத்து, ஒரு நபர் அல்லது குடும்பத்திற்கு அதிகபட்சமாக மூன்று சிறிய அவசரகால நிவாரணத் தொகைகள் அடுத்த ஆறுமாத காலத்தில் வழங்கப்படலாம்.
உங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படுமானால், ஒரு தனிப்பட்ட அவசரகால நிவாரணத் தொகை கிடைக்கலாம். இரண்டு நிதி உதவிகளையும் அணுகவேண்டுமானால் நீங்கள் தனித்தனி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அவசரகால நிவாரணத் தொகை என்பது உங்களுடைய வருமானத்திற்கான உதவி இல்லை. அவை வரம்பிடப்பட்டது மற்றும் உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பதை நாங்கள் அறிவோம்.
இந்தச் சேவை யாருக்கானது?
ஏராளமான மக்கள் COVID-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவசரத் தேவைகளுடன் விக்டோரியாவில் வசிக்கும் கீழ்காணும் மக்களுக்கு மட்டுமே ஆதரவு வழங்க முடியும்:
- ஆஸ்திரேலிய குடிமக்களல்லாதவர்கள் அல்லது நிரந்தரக் குடியுரிமை இல்லாதவர்கள்; மற்றும்
- காமன்வெல்த் அரசின் வருமான உதவிக்குத் தகுதி பெறாதவர்கள்; மற்றும்
- தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு (Red Cross மூலம் வழங்கப்பட்டவர்கள் தவிர) என வழங்கப்படும் மாநில அல்லது பிராந்திய நிதி உதவிகளுக்குத் தகுதி பெறாதவர்கள்; மற்றும்
- வருமானம் இல்லாத அல்லது மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்கள், சேமிப்பு இல்லாத அல்லது குறைவான சேமிப்பு கொண்டவர்கள் மற்றும் துணைவர், குடும்ப உறுப்பினர்கள் அல்லது சமூகத்தின் பிற ஆதரவை அணுக முடியாத நிலையில் உள்ளவர்கள்.
விக்டோரியன் அரசின் சர்வதேச மாணவர் அவசரகால நிவாரண நிதிக்குத் தகுதியான சர்வதேச மாணவர்கள், முதல் படியாக, அந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிய, எங்களுடைய சர்வதேச மாணவர்களுக்கான COVID19 ஆதாரக்குறிப்புகள் என்னும் தகவல் பக்கத்தைப் பார்க்கவும்.
நீங்கள் விக்டோரியாவில் வசிப்பவர் இல்லை எனில், வேறு அவசரகால நிவாரண உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் முன் உங்களுக்குத் தேவைப்படுபவை:
உங்களுடைய பாஸ்போர்ட் எண் அல்லது இம்மி கார்டு எண் போன்ற உங்களுடைய தற்போதைய அல்லது மிக சமீபத்திய விசா நிலையைக் கண்டறியும் சான்றுகள். உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பியுங்கள். அது குறித்து பேச நாங்கள் உங்களைத் தொடர்புக் கொள்கிறோம்.
நிதிப் பற்றாக்குறைக்கான சான்றுகள்:
- குடும்பத்தின் அனைத்து வயதுவந்த உறுப்பினர்களும் விண்ணப்பித்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முந்தைய நடப்பு வங்கிக் கணக்கின் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- நீங்கள் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு தொடர்ச்சியாக பணப் பரிவர்த்தனை செய்திருந்தால், அந்தக் கணக்கிற்கான வங்கி அறிக்கையை வழங்க வேண்டும்
- உங்கள் பெயர், கணக்கு எண் மற்றும் முகவரியைக் காட்டுவதாக இருந்தால் மட்டுமே ஸ்கிரீன் ஷாட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
நீங்கள் இந்த தகவலை வழங்கவில்லை என்றால், உங்கள் விண்ணப்பம் தாமதமாகலாம்.
உங்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுமானால், விண்ணப்பத்தில், Red Cross - இல் இருந்து தொலைபேசி அழைப்பைப் பெறுதல் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் Red Cross உங்களைத் தொடர்புகொள்ளும்.